Thursday, July 17, 2025
Your AD Here

அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே நெறிப்படுத்தலில் இன்று (16) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாவிதன்வெளி பிரதேசத்தில் நன்னீர் மீன் பிடிப்பு குளங்களை தூர்வாருவது தொடர்பாகவும், கிட்டங்கி ,நாவிதன்வெள் அன்னமலை ,சொறிக்கல்முனை ,குடியிருப்புமுனை போன்ற பகுதிகளில் மீன்பிடிக்கு இடையூறாக அமைந்துள்ள சல்பீனியாவை அகற்றுவது தொடர்பாகவும் ,நன்னீர் மீனவர்களுக்கு இறங்கு துறைகளை அமைப்பது தொடர்பாகவும் தவிசாளர் என்ற ரீதியில் என்னால் பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எத்திவைக்கப்பட்டதோடு மீனவர்களின் நலன் சார்ந்த பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் பாசித், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்