Thursday, July 17, 2025
Your AD Here

கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் 43 குற்றச்சாட்டுகள்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷினி ஏபா, 3 மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 43 குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர் பிரதிவாதிகளை ரூ. 50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ. 1 மில்லியன் பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து, இவர்கள் அனைவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதோடு, அவர்களின் கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்யவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.மேலும், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அறிக்கை பெறவும் உத்தரவிடப்பட்டது.

ரூ. 97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்ததற்காக, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்