ரெஹாம் கானின் கட்சியின் பெயர் பாகிஸ்தான் குடியரசுக் கட்சி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார்.
பாகிஸ்தான் குடியரசுக் கட்சி என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இக்கட்சி பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் என்று ரெஹாம் கான் தெரிவித்துள்ளார்.
தொழில் ரீதியாக பத்திரிகையாளரான ரெஹாம், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கானை திருமணம் செய்து கொண்ட பின்னர் திரைக்குப் பின்னால் இருந்து அரசியலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது, என்றாலும் சில மூத்த கட்சி உறுப்பினர்கள் அவரது அரசியல் இருப்பை விரும்பாத சூழலில் அவர் கட்சி விவகாரங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். ஒரு வருட காலத்திற்குள் இம்ரான் கானும் ரொஹாம் கானும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.