Saturday, July 19, 2025
Your AD Here

சஜித்தின் வீடமைப்பு திட்ட முறைகேடு விசாரணைகள் ஆரம்பம்.

அமைச்சின் நிலையான விசாரணை பணியகம் முன்னெடுப்பு

சஜித் பிரேமதாச அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019 காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.

வீடமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையில் அவ்வமைச்சின் நிலையான விசாரணை பணியகத்திடம் இவ்விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த வீடமைப்புத் திட்டங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து அமைச்சு மட்டத்திலான விசாரணைகளை முன்னெடுக்க கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக, அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில், தேர்தலை மையப்படுத்தி அதற்கான விளம்பரங்களுக்கு பல கொடி ரூபா செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்