2015 தேர்தல் வேளையில் அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை, தமது ஆதரவாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் கீழ் கடந்த 04ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.