Saturday, July 19, 2025
Your AD Here

யாழ். வந்தடைந்த தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ்.

தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை (19) மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள், இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (18) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும், மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்