வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் மகோற்சவம் எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இவ் மகோற்சவத்தினை முன்னிட்டு நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டலும்,செங்குந்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.
கருவரையில் வீற்றிருக்கும் அலங்காரவேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று காலை 8.30 மணி சுப நேரத்தில் தேவஸ்தான பிரதம குரு வைகுந்தகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நல்லையம்பதி அலங்காரகந்தன் தேவஸ்தான வளாக சுற்றாடல் பகுதியில் பந்தல் நாட்டி வைத்ததை தொடர்ந்து மாட்டு வண்டி மூலமாக சென்று செங்குத்தா பரம்பரை சார்ந்தவர்களுக்கான காளாஞ்சியும், மகோற்சவ நாளிதழினையும் வழங்கி வைத்தனர்.
இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 22ஆம் திகதி கொடியிறக்கத்துடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.













