மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கு உட்பட்டு குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு புதிதாக கல்வீடு கட்டப்பட்டு அவர்களது பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
14 லட்சம் ரூபாய் நிதியில் இந்த வீடு புதிதாக கட்டப்பட்டு இன்றைய தினம் குறித்த குடும்பத்தின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு வீட்டிற்க்கான சாவியும் இதன் போது கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இந்த கட்டிடம் ஆனது அன்பளிப்பாக திரு,திருமதி துரைநாயகம் நிதிவதனி தம்பதியினரால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சுவிஸ் உதயம் தாய் சங்கத்தின் பொருளாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் மற்றும் அவரது மனைவி நிதிவதனி, யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த பாலன் குடும்பத்தினர், சுவிஸ் உதயத்தின் கிழக்கு மாகாண உறுப்பினர்கள், பொதுமக்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.













