இலங்கையர் தினத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் புதியதொரு ஆரம்பமாக இலங்கையர் தின நிகழ்வு அமையும் என தாம் உறுதியாக நம்புவதாகவும், தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய பாரிய பொறுப்பு தமது அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் அதனை நோக்கி பயணிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஒக்டோபர் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் நடவடிக்கையும், நல்லிணக்கம் நோக்கிய இந்த விரிவான பயணமும் தொடரும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 2026 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.





