நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின்போது, மொத்தம் 696 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஒரு நாளில் 28,194 நபர்கள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டனர், அவர்களில் 24 பேர் நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே உள்ள பிடியாணை அடிப்படையில் 329 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கள் பெயர்களில் திறந்த பிடியாணைகளைக் கொண்ட 174 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 24 பேர், போதையில் வாகனம் செலுத்திய 27 சாரதிகள் கைது செய்யப்பட்டனர். அலட்சியமாக வாகனம் செலுத்திய குற்றத்திற்காக மேலும் 24 பேர் தடுத்து வைக்கப்பட்டனர்.
பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விசேட பொலிஸ் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





