தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த வருடத்திற்குள் நாளாந்த குறைந்தபட்ச சம்பளமாக ரூ. 1,750 கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார்.
இந்திய நிதியுதவியுடன் நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக ரூ. 1,750 நாளாந்த சம்பளத்தை கோரி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
”அவர்களுக்கு அந்த உரிமையை இந்த வருடத்திற்குள் எப்படியாவது வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்,” என்றும் அவர் கூறினார்.





