Saturday, April 25, 2026
Your AD Here

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – விரிவடையும் விசாரணை

மோசடி செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவுக்கு தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

0112882228 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் விசேட விசாரணைப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட பொலிஸ் பிரிவுக்கு அந்த தகவல்களை வழங்க முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் குறித்து பொலிஸ் பிரிவுக்கு ஏற்கனவே ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கடந்த 02 நாட்களில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து பணம் பெற்றதற்காக ஒரு பெண் உட்பட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டுபாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடமிருந்து 8 இலட்சம் ரூபாய் பணத்தை பெண்ணும், குருநாகல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எனக்கூறி சட்டவிரோத ஆட்சேர்ப்புக்கான நேர்காணலை நடத்திய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்