Saturday, April 25, 2026
Your AD Here

யாழ் செம்மணி பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு.

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று (13) இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

யாழ்ப்பாணம் உடுத்துறை பகுதியைச் சேர்ந்த, செந்தமிழ் விளையாட்டுக் கழக வீரரும் சிறந்த உதைப்பந்தாட்ட நடுவருமான 27 வயது இளைஞர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்