நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியாது என சட்டமா அதிபர் திணைக்களமும், பாராளுமன்ற செயலாளர் சபையும் பரிந்துரைத்ததாக சபாநாயகர் கூறியது முற்றிலும் பொய்யாகும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டின் மூன்றாவது பிரஜையும் பாராளுமன்றத்தின் பிரதானியுமான சபாநாயகர் பொய் கூறி பாராளுமன்றத்தையே ஏமாற்றியிருக்கின்றார்.
பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலுள்ள சபாநாயகரே இவ்வாறு பாராளுமன்ற கௌரவத்தை சீரழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
நம்பிக்கையில்லா பிரேரணையொன்று தொடர்பிலேயே அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை தொடர்பில் எதிர்க்கட்சியினரால் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.





