Thursday, April 23, 2026
Your AD Here

கண்டி – கொழும்பு ரயில் சேவை மீள ஆரம்பம்: நிலச்சரிவால் ஏற்பட்ட தடை நீங்கியது.

நிலச்சரிவு மற்றும் ரயில் தடம் புரண்டதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) முதல் தடைப்பட்டிருந்த கண்டி மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவைகள், இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 23) காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளதாவது:

கனமழைக் காரணமாக ரம்புக்கனைக்கும் பேராதெனியவுக்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில், குறிப்பாக கடிகமுவ மற்றும் பலான நிலையங்களுக்கு இடையில், பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் மண் அரிப்பு ஏற்பட்டது.

இதனால், கடந்த மூன்று நாட்களாகப் பல ரயில் சேவைகள் (நேற்று அக்டோபர் 22ஆம் திகதி உட்பட அனைத்து பயணிகள் சேவைகளும்) முழுமையாக இரத்து செய்யப்பட்டிருந்தன.

தற்போது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை முதல் கண்டி – கொழும்பு பிரதான மார்க்கத்தில் ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

இந்தச் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வழமையான பயண அட்டவணையின்படி தமது ரயில் சேவைகளை மீண்டும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்