27 ஜூலை 2024 வெள்ளிக்கிழமை
1)மேஷம்:-
சொந்தத் தொழில் சுறுசுறுப்பாக நடந்தாலும் ஆதாயம் கிடைப்பது அரிது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.
2)ரிஷபம் :-
கூட்டுத் தொழில் நன்றாக நடைபெற்று எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். குடும்பம் சீராக நடைபெற்று வரும். கடன் தொல்லைகள் குறையும்.
3)மிதுனம்:-
எதிர்பார்க்கும் பணவரவு சிறிது தாமதமாக வந்து சேரும். சொந்த தொழிலில் கவனமாக இல்லாவிட்டால் சிரமங்களை சந்திப்பீர்கள்.
4)கடகம்:-
இல்லத்தில் மங்கள நிகழ்சிகள் தொடர்ந்து நடைபெற்றாலும் அவற்றில் பணத்தை அளவாக செலவு செய்யுங்கள்.
5)சிம்மம்:-
பணவரவு உற்சாகமளிக்கும். குடும்பத்துக்கு தேவையானதை வாங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் ஆதாயம் பெருகும்.
6)கன்னி:-
தேவையற்ற காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.
7)துலாம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களின் பணியில் அதிகம் கவனம் செலுத்துவர். கூட்டுத்தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும்.
8)விருச்சிகம்:-
பண வரவு எதிர்பார்க்கும் படி வந்து சேரும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். ஆன்மீக பயணங்களுக்கு ஏற்ற சூழ்நிலை உஉங்களுக்கு வரும்.
9)தனுசு:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு தொழிலை விரிவாக்கம் செய்ய திட்டமிடுவீர்கள்.
10)மகரம்:-
முக்கிய நண்பர்கள் கருத்து வேறுபாட்டால் பிரிந்து செல்ல நேரிடும். கூட்டாளிகளுக்குள் பல விஷயத்தில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.
11)கும்பம்:-
குடும்பம் சிறுசிறு பிரச்சனைகளுக்கு இடையில் நன்றாக நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
12)மீனம்:-
வெளியூரிலிருந்து வரும் முக்கிய தகவலால் பயணம் மேற்கொள்ள நேரிடும். கூட்டுத்தொழில் நன்றாக நடைபெற்றாலும் சுமாரான லாபமே வந்து சேரும்.