05 ஆகஸ்ட் 2024 திங்கட்கிழமை
1)மேஷம்:-
சொந்த தொழிலில் புதிய வாடிக்கையாளர்களும் வந்து இணைவர். நினைத்த காரியங்களை தீவிர முயற்சியுடன் செய்து முன்னேறுவீர்கள்.
2)ரிஷபம் :-
சொந்த தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் வருகையும் அவர்களால் பொருளாதார முன்னேற்றமும் உண்டு.
3)மிதுனம்:-
சொந்தத் தொழிலில் பரபரப்பாக வேலை நடைபெறும். ஓய்வின்றி உழைப்பீர்கள். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வந்து சேரும்.
4)கடகம்:-
உறவினர்களிடமும் நண்பர்களிடமும் சுமூகமாக நடந்து கொள்வீர்கள். வெளிநாட்டு தகவலில் மகிழ்ச்சி ஏற்படும்.
5)சிம்மம்:-
சக பணியாளர்களின் வேலைகளால் சிக்கல் ஏற்படக்கூடும். சொந்த தொழில் நன்றாக நடைபெறும் ஆனால் எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைக்காது.
6)கன்னி:-
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சகல விடையங்களிலும் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
7)துலாம்:-
அலுவலகத்தில் தங்கள் எதிர்பார்ப்புகளை அடைவதில் சிக்கல் ஏற்படலாம். செய்யும் காரியங்களில் கவனமும் நிதானமும் தேவை.
8)விருச்சிகம்:-
வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் நிதானமான முடிவை எடுங்கள்.
9)தனுசு:-
சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைக்கும். வரவேண்டிய தன வரவுகள் தாமதம் இல்லாமல் வந்து சேரும்.
10)மகரம்:-
எதிர்பார்க்கும் பண வரவு குறித்த காலத்தில் வந்து சேரும். எதிர்பார்த்திருந்த கடன் உதவியும் கிடைத்து மகிழ்வீர்கள்.
11)கும்பம்:-
எதிர்பார்த்த பண வரவும் அலுவலகத்தின் மூலம் கிடைக்கப்பெறும். முயற்சியுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
12)மீனம்:-
அனேக காரியங்களில் தீவிரமாக முயற்சி செய்தாலும் சிலவற்றிலேயே எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும்.