21 ஆகஸ்ட் 2024 புதன்கிழமை
1)மேஷம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. பாகப்பிரிவினை முடிவடையாமல் போகலாம். அண்ணன் தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்பட்டு நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்பு உண்டு.
2)ரிஷபம் :-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. எதிர்பார்த்த சலுகைகள் மறுக்கப்படுவதன்காரணமாக இந்த வேலையில் இருந்து விலகி வேறு வேலைக்கு செல்லலாமா என்று சிந்திப்பீர்கள்.
3)மிதுனம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தில் இருந்து நிர்பந்தம் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது.
4)கடகம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. புதியவர்களை நம்பி செய்த காரியங்களில் இழப்புகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
5)சிம்மம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. உத்தியோகத்தில் திடீர் மாற்றம் வந்து மன வருத்தத்தை ஏற்படுத்தும். ஒரு கடனை அடைக்க மற்றும் ஒரு கடன் வாங்கும் சூழல் வரலாம்.
6)கன்னி:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. கொஞ்சம் பொறுமையோடும் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.
7)துலாம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. பணவரவு ஓரளவு திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தை பொருத்தவரை விருப்பம் இல்லாத இடத்திற்கு மாறுதல் வரலாம்.
8)விருச்சிகம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும். இடம் வாங்குவது வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.
9)தனுசு:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. தேக நலனில் கவனம் தேவை. ஒவ்வாமை நோய்க்கு ஆள்பட நேரிடும். அலைச்சலை குறைத்து ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல்நலத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
10)மகரம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உத்தியோகம் மற்றும் தொழிலில் மாற்றமும் ஏற்றமும் கிடைக்கும்.
11)கும்பம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. வருமானம் பற்றாக்குறை அதிகரிக்கும். வருங்காலத்தை பற்றிய பயம் எப்போதும் இருக்கும்.
12)மீனம்:-
மரணயோகம் சுபகருமம் தவிர்க்க. மணிவிழா மணவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும் சூழல் உருவாகும். அருகில் இருப்பவர்களின் ஆதரவோடு நல்ல காரியம் ஒன்றை நடத்தி வைப்பீர்கள்.