30 ஆகஸ்ட் 2024 வெள்ளிக்கிழமை
1)மேஷம்:-
குடும்ப ஒற்றுமை குறையும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் உங்களிடம் கேட்காமல் முடிவெடுத்து காரியங்களை செய்ய தொடங்குவார்.
2)ரிஷபம் :-
பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். ஒரு சிலருக்கு கைமாற்று வாங்கும் சூழல் உருவாகும்.
3)மிதுனம்:-
வீண்விரையங்கள் தலை தூக்கும். எந்த ஒரு முயற்சி செய்தாலும் இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும்.
4)கடகம்:-
அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீர் திருப்பங்கள் வந்து சேரும்.
5)சிம்மம்:-
எந்த காரியத்திலும் உடனடியாக முடிவெடுக்காமல் மறுபரிசலினை செய்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வது,கூட்டாளிகளை இணைத்துக்கொள்வது பற்றி ஆலோசனை செய்வீர்கள்.
6)கன்னி:-
அரசியல் களத்தில் உள்ளவர்கள் அதிரடியான திருப்பங்களை சந்திப்பார். பெற்றோர் வழியிலும் மற்றோர் வழியிலும் பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும்.
7)துலாம்:-
பிள்ளைகளின் சுபகாரிய பேச்சை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்கி மகிழுவீர்கள்.
8)விருச்சிகம்:-
ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
9)தனுசு:-
வீடு வாகனம் வாங்க கடன் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கக்கூடும். புதிய வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும்.
10)மகரம்:-
நினைத்த காரியத்தை உடனடியாக செய்ய முடியாது. சகோதர வழியில் செலவுகள் அதிகரிக்கும். தொழிலை மாற்றுவது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
11)கும்பம்:-
மருத்துவச் செலவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். எதையும் துணிந்து செய்ய இயலாது.
12)மீனம்:-
முன்னேற்ற பாதையில் அடி எடுத்து வைக்கும் இந்த நேரத்தில் முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.