01செப்டம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை
1)மேஷம்:-
வந்த வரன்கள் கை நழுவி செல்லும். இக்காலத்தில் யாருடனும் பகைமை பாராட்ட வேண்டாம்.
2)ரிஷபம் :-
ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது.
3)மிதுனம்:-
சக பணியாளர்களிடம் அனுசரணியாக நடந்து கொள்வது நல்லது. முன்கோபத்தின் காரணமாக உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும்.
4)கடகம்:-
வில்லங்கங்கள் அகல முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்து இணையலாம்.
5)சிம்மம்:-
புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும். சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.
6)கன்னி:-
சக பணியாளர்களை நம்பி செயல்பட இயலாது. இந்த காலகட்டத்தில் பொறுமை மிக அவசியம்.
7)துலாம்:-
தொழிலில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். கிளை தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.
8)விருச்சிகம்:-
படித்து முடித்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் வாழ்க்கை துணைக்கு இப்பொழுது வேலை கிடைக்கும்.
9)தனுசு:-
என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கி போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று மகிழ்ச்சியை கொடுக்கும்.
10)மகரம்:-
உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். பணி புரியும் இடத்தில் உங்களையும் ஒரு பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்வதாக சொல்லலாம்.
11)கும்பம்:-
தொழில் முன்னேற்றம் ,கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்தல், சகோதர ஒத்துழைப்பு, இழப்புகளை ஈடு செய்ய புதிய வழி, எதிர்பாராத நல்ல திருப்பம் போன்றவை ஏற்படும்
12)மீனம்:-
தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்குரிய செய்திகள் வந்த வண்ணமே இருக்கும்.