02 செப்டம்பர் 2024 திங்கட்கிழமை
1)மேஷம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. முக்கிய புள்ளிகள் சந்திப்பும் அதனால் முன்னேற்றமும் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
2)ரிஷபம் :-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. விரயத்திற்கு ஏற்ற வரவு வந்து சேரும். எந்த ஒரு காரியத்தையும் பணம் கைக்கு வந்ததும் செய்யலாம் என்று நினைத்தால் அது நடக்காது.
3)மிதுனம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஊர் மாற்றம் உங்கள் உள்ளத்தை மகிழ்விப்பதாக அமையும்.
4)கடகம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. சொத்து விற்பனையும் அதனால் தன லாபம் கிடைக்கலாம். கட்டிய வீட்டை விற்று விட்டோமே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு.
5)சிம்மம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஒற்றுமையோடு செயற்பட்டு பாகப்பிரிவினைக்கு முன்வருவர்.
6)கன்னி:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. கூட்டாளிகளை நம்பி ஏமாறும் சூழ்நிலையும் உண்டு. உடன் பிறப்புகள் உங்கள் மீது பழி சுமத்தலாம்.
7)துலாம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. வீடு வாங்க வேண்டும் இட வாங்க வேண்டும் மனை கட்டி குடியேற வேண்டும் என்ற அசை இப்பொழுது ஒவ்வொன்றாக நிறைவேறும்
8)விருச்சிகம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். தொழிலில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தென்படும்.
9)தனுசு:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. படித்து முடித்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு வேலையும் கிடைக்கும். திருமண முயற்சியும் கைகூடும் .
10)மகரம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. தொழில் நடத்துபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். தொழிலில் லாபம் கிட்டும்.
11)கும்பம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் .சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள்.
12)மீனம்:-
அமாவாசை விரதம், சிவன் வழிபாடு செய்க. நண்பர்களும் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் கைநழுவி சென்ற வாய்ப்புகள் மீண்டும் கை கூடி வரும்.