Saturday, September 6, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 04 செப்டம்பர் 2024

04 செப்டம்பர் 2024 புதன்கிழமை

1)மேஷம்:-
உறவினர்களில் ஒருவரால் ஏற்பட்ட சிறு மன வேறுபாடு கலக்கத்தை தந்தாலும், பெற்றோர்களின் பேச்சுக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

2)ரிஷபம் :-
மற்றவர்களால் கடினமாக கருதப்படும் செயலை எளிதாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் சிறிய தாமதத்திற்கு பின்னர் கைக்கு வந்து சேரும்.

3)மிதுனம்:-
சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பிய இட மாற்றம் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.

4)கடகம்:-
எங்கு தேடியும் இதுவரை கைக்கு கிடைக்காத பொருட்கள் இப்போது அதுவாக உங்கள் கண்களில் பட்டு ஆச்சரியப்படுத்தும்.

5)சிம்மம்:-
தாய் வழி உறவுகளின் மங்கள நிகழ்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள்.  பணிபுரிவோர் தங்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும்.

6)கன்னி:-
நீண்ட தூரத்தில் இருந்து கடிதம் மூலம் முக்கியமான செய்தி வந்து சேரும். உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

7)துலாம்:-
அலுவலகப் பணிகளில் உத்தியோகத்தர்களுக்கு ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்படும்.

8)விருச்சிகம்:-
உத்தியோகத்தர்களில் சிலர் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சொந்த தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைப்பது கடினம்.

9)தனுசு:-
நீண்ட காலமாக சந்திக்காத ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். தன வரவு இருந்தாலும் அது தேவையான நேரத்தில் கிடைக்காமல் காலம் தள்ளி கைக்கு கிடைக்கும்.

10)மகரம்:-
பண வரவுகளில் இருந்த சிக்கல் தீர்ந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு சக பணியாளர்களிடம் மனக்க சப்பு உருவாகலாம்.

11)கும்பம்:-
தந்தை வழி உறவுகளின் இல்லத்து நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். புதிய முயற்சிகளில் எதிர்பாராத சோதனைகளை சந்திப்பீர்கள்.

12)மீனம்:-
தாய் வழி உறவுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்வீர்கள். குலதெய்வ வழிபாட்டுக்கு குடும்பத்தோடு செல்ல திட்டமிடுவீர்கள்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்