மண்டூரில் படுகொலை செய்யப்பட்ட மதிதயனின் மீள் விசாரணைக்கு அமைச்சர் பரிந்துரை
போரதீவுப்பற்று தவிசாளர் வி.மதிமேனன் கூட்டத்தில் நீதி கோரினார்
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட மண்டூரில் 2015ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சச்சிதானந்தம் மதிதயனை சுட்டுக்கொன்றது யார் என இதுவரைக்கும் தெரியப்படுத்தப்படவில்லை என போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நீதியினை நிலைநாட்டுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கோரினார்.
மேலும் அமைச்சர் கூறுகையில், கடந்த அரசாங்கங்களில் இவ்வாறு பல கொலைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் நாம் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி பூரண விசாரணைகளை மேற்கொண்டு நீதியினை நிலைநாட்டுவதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்படவில்லை. நாம் எந்த பேதமுமின்றி நீதியினையும், சட்ட ஒழுங்குகளையும் நிலைநாட்டுவதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
தவிசாளர் கூறிய இந்த கொலைக்கான நீதியினை நிலைநாட்டுவதற்காக குறித்த சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை செய்து நீதியினை நிலைநாட்டுவதற்கு விசாரணையினை ஆரம்பிக்குமாறு வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.