இந்திய அரசாங்கம், 2015 ஜனவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்து, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, பயண ஆவணங்கள் அல்லது வீசா இல்லாத இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு குடிவரவு சட்டங்களின் கீழ் இருந்து விலக்கு அளித்துள்ளது.
இதேபோன்று, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2024 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின் மதத்தவர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகிய ஆறு சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஆவணமற்ற அகதிகளுக்கும் இந்த விலக்கு பொருந்தும்.
இதுகுறித்து மத்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த உத்தரவின் கீழ் உள்ளவர்களுக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
இந்தியாவில் நீண்ட காலமாக அகதியாக வசிப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மனிதாபிமான நிவாரணமாகக் கருதப்படுகிறது.