விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (05) பிற்பகல், வைத்திய ஆலோசனையின் பேரில் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
மகாவலி அதிகார சபையின் நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவரது அரசியல் அலுவலகம் 2022 ஆம் ஆண்டு மக்கள் கலவரத்தின்போது அழிக்கப்பட்டதற்காக, இழப்பீடாக 8.85 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில், சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) ஆல் கைது செய்யப்பட்டார்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சஷீந்திர ராஜபக்ஷ மீதான வழக்கு கடந்த ஓகஸ்ட் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதன்போது, கொழும்பு பிரதான நீதவான், அவரை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.