எல்லவில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, இந்த கோளாறு தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
எல்ல-வெல்லவாய பிரதான வீதியை விட்டு விலகி படுகுழியில் பாய்ந்த பஸ், பின்னர் மீட்கப்பட்டது.
மேலதிக பரிசோதனைகளுக்காக குறித்த பஸ் நாளை (08) அரசாங்க பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.