Sunday, September 7, 2025
Your AD Here

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவு-கல்முனையில் துஆ பிரார்த்தனை நிகழ்வு.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 159 வது ஆண்டு நிறைவினை  முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இன்று (3) இடம்பெற்றன.

இதற்கமைய   159 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று(3) கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வருகை தந்திருந்தார்.


கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கல்முனை வாழ் மக்கள் அவரை  வரவேற்று கௌரவமளித்துள்ளனர்.


 இதன் போது அங்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு    இன நல்லிணக்கம்  பொதுமக்கள் தொடர்பாடல்  போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக கல்முனை தலைமையக  பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட  பொலிஸ் ஆலோசனை குழு  உறுப்பினர்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

இறுதியாக தீவு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸார், மரணமடைந்த பொலிஸார், அங்கவீனம் அடைந்துள்ள பொலிஸார் ,ஆகியோருக்கு துஆ  பிரார்த்தனையும் இங்கு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அம்பாறை மாவட்ட  பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி, அக்கரைப்பற்று   பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண ,கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், கல்முனை தலைமையக நிர்வாக பிரிவு   பொறுப்பதிகாரியும்    பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ. வாஹீட் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்