Sunday, September 7, 2025
Your AD Here

சிகிரிய அதுருதஹன் போதைப்பொருளுடன் கைது.

30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சிகிரிய அதுருதஹன் என்ற போதைப்பொருள் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிகிரியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உள்ளிட்ட குழுவினரால் நேற்று (04) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

சிகிரிய ரங்கிரிகம பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் 280 மில்லிகிராம் குஷ், 50 கிராம் 11 மில்லிகிராம் ஐஸ், சுமார் 23,000 ரூபாய் பணம் மற்றும் 2 கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டன. 

சந்தேக நபர் முன்னர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. 

சம்பவம் குறித்து சிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்