Sunday, September 7, 2025
Your AD Here

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான ஒன்று!

இது குறித்து எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை

இலங்கைக்கு சொந்தமான கச்சதீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ளத் தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (04/09) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அண்மையில் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். வடக்கு விஜயத்தின் போது ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருந்தார். ஜனாதிபதி கச்சதீவுக்கு விஜயம் செய்தமை விசேட விடயமல்ல.

தற்போது தென்னிந்திய அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் குழுக்கள் தங்கள் அரசியல் இலாபத்தினை இலக்காகக் கொண்டு கச்சதீவு விவகாரத்தினை கருவியாக பயன்படுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்