காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) தனது ஆரம்பக்கட்ட விசாரணையில் 6,700 வழக்குகளை நிறைவு செய்துள்ளது.
OMP சட்டத்தரணி மஹேஷ் கட்டுலந்தா தெரிவித்துள்ளார், மொத்த காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகள் 16,700 என பதிவாகியுள்ளன என்றும், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மீதமுள்ள 10,000 வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.