கச்சைதீவை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் சார்பாக யாழ் ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் பெர்னாட் ஞானப்பிரகாசம் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
”இந்தத் தீவு இலங்கை மற்றும் இந்திய மீனவர்களால் அடிக்கடி வந்து வழிபடப்படும் ஒரு புனித இடமாகும். அதை சுற்றுலாத் தலமாக மாற்றுவது மதத்திற்கு ஒரு அவமானம்” என்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் ஆயர் தெரிவித்தார்.
மீனவர்களின் நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தின்படி, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் இரு நாட்டு மீனவர்களுக்கும் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. எனவே, இந்த இடத்தின் புனிதத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் என யாழ் ஆயர் வலியுறுத்தினார்.