தெற்கு இலங்கையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்கள், வட மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேங்காய்களை தீவிரமாக கொள்வனவு செய்கின்றன.
மத்தியஸ்தர்கள் மூலம், உரிக்கப்பட்ட தேங்காய்கள் ஒரு கிலோகிராம் 160 ரூபாய்க்கு வாங்கப்படுகின்றன, அதே சமயம் உரிக்கப்படாத தேங்காய்கள் ஒரு கிலோகிராம் 100 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
முந்தைய ஆண்டுகளில் ஒரு தேங்காய் 70-90 ரூபாய்க்கு விற்றதாகவும், தற்போதைய இந்த விலை உயர்வில் மகிழ்ச்சியடைவதாகவும் உள்ளூர் விவசாயிகள் தெரிவித்தனர்.
கொழும்பில் ஒரு தேங்காய் 180 ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.