ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது, ஜனாதிபதிகளின் சலுகைகள் (ரத்து) மசோதா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், முன்னாள் அரச தலைவர்களுக்கான பாதுகாப்பு தனியாக நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும், அது அப்படியே தொடரும் எனவும் வலியுறுத்தினார்.
தமது பாதுகாப்புக் குறித்து கவலை கொண்ட எவரும், பாதுகாப்புக் இடர் குழுவிடம் கோரிக்கை சமர்ப்பிக்க முடியும் எனவும், அக்குழுவே தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொறுப்பானது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட விரிவான பணியாளர்கள் குறித்து விஜேபால விவரித்தார். அதன்படி, மஹிந்த ராஜபக்சவுக்கு 111 பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளனர். அவர்களில்,
9 மருத்துவ ஊழியர்கள்
8 சாரதிகள்
2 எழுதுபவர்கள்
5 இயந்திரப் பணியாளர்கள்
1 கடற்படை உதவியாளர்
46 சிறப்பு நடவடிக்கைப் பணியாளர்கள்
16 சமையல்காரர்கள்
26 மின்சார வல்லுநர்கள்
4 சிவில் பொறியியலாளர்கள்
4 தொழில்நுட்ப பொறியியலாளர்கள்
2 களஞ்சிய காவலர்கள்
3 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள்
1 தச்சர்
1 நாய் பராமரிப்பாளர்
ஆகியோர் அடங்குவதாக அவர் கூறினார்.
மேலும், கோட்டாபய ராஜபக்சவுக்கு 60 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில்:
3 மருத்துவ உதவியாளர்கள்
1 பராமரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்
6 சாரதிகள்
5 எழுதுபவர்கள்
8 பாதுகாப்பு அதிகாரிகள்
13 ஆதரவு பணியாளர்கள்
8 சமையல்காரர்கள்
3 தொழில்நுட்ப வல்லுநர்கள்
1 உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்
6 சிறப்பு நிபுணர்கள்
1 நாய் பராமரிப்பாளர்
ஆகியோர் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சலுகைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கும் அவர்களது விதவைகளுக்கும் 2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூபா 98.5 மில்லியன் செலவழித்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
அதன் விபரம்:
ஹேமா பிரேமதாச – ரூபா 2.687 மில்லியன்
சந்திரிகா குமாரதுங்க – ரூபா 16.43 மில்லியன்
மஹிந்த ராஜபக்ச – ரூபா 54.62 மில்லியன்
மைத்திரிபால சிறிசேன – ரூபா 15.77 மில்லியன்
கோட்டாபய ராஜபக்ச – ரூபா 12.28 மில்லியன்
ரணில் விக்கிரமசிங்க – ரூபா 3.49 மில்லியன்