Thursday, September 11, 2025
Your AD Here

சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டனர். 

16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்