அப்துல் அஸீஸ் அண்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண 2025 மின்னொளி சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் ஊடகப் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை(10) இரவு மருதமுனை அப்துல் அஸீஸ் அண்ட் சன்ஸ் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சினாஸ் ஒருங்கிணைப்பில் அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துல் அஸிஸ் அப்துல் கபீல் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது அச்சு ,இலத்திரனியல், சமூக ஊடகம் , வானொலி ,உள்ளிட்ட ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 20க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அப்துல் அஸீஸ் அண்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண 2025 மின்னொளி சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (12 ) இரவு இடம்பெறவுள்ளது.
குறித்த சுற்றுப்போட்டியினை அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம் மற்றும் மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்துடன் இணைந்து மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




