Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்-25 ஜூலை 2024

25 ஜூலை 2024 வியாழக்கிழமை

1)மேஷம்:-
மூலப்பொருள் விலை அதிகரிப்பதால் திட்டமிட்டபடி முதலீடு செய்வதில் சிறிய தடை ஏற்படும். கூட்டுத் தொழில் சுமாராக நடைபெற்றாலும் எதிர்பார்க்கும் லாபம் குறையாது.

2)ரிஷபம் :-
சொந்த தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் அவர்களால் தொழில் ரீதியான முன்னேற்றமும் ஏற்படும்.

3)மிதுனம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் அலுவலகத்தில் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. பணிச்சுமை அதிகரிக்கும்.

4)கடகம்:-
உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் தேவையை அடைய சிறிது காலம் பொறுமையாக இருப்பது அவசியம்.

5)சிம்மம்:-
உறவுகளால் செலவு இருந்தாலும் பயணங்களும் அதிகரிக்கும். சக பணியாளர்கள் அனுகூலமாக நடந்து கொள்ள சொந்த தொழில் சிறப்பாக நடைபெறும்.

6)கன்னி:-
புதிய நபர்களின் வருகையால் தொழிலில் முன்னேற்றமும் வருமான உயர்வும் ஏற்படும். கூட்டுத் தொழில் வியாபாரம் இரட்டிப்பு லாபத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

7)துலாம்:-
அலைச்சல் இருந்தாலும் அதற்கே ஆதாயமும் இருக்கும். பிரியமானவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். சிறு பாராட்டுக்கள் தேடி வரும்.

8)விருச்சிகம்:-
உத்தியோகத்தர்களுக்கு உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். சக நண்பர்களுடன் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது.

9)தனுசு:-
சொந்த தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத் தொழில் லாபம் தருவதாக இருக்கும்.

10)மகரம்:-
சொந்த தொழில் பணி சுமை அதிகரித்தாலும் புதிய வருமானம் இருக்காது. கூட்டுத் தொழில் நன்றாக நடந்தாலும் ஆதாயம் எதிர்பார்த்த அளவு கிடைக்காது.

11)கும்பம்:-
உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் முக்கிய வேலை ஒன்றை செய்து பாராட்டு பெறுவர்.

12)மீனம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது.  ஓய்வின்றி உழைத்தால் தான் ஓரளவு வருமானம் கைக்கு கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்