28 ஜூலை 2024 வெள்ளிக்கிழமை
1)மேஷம்:-
நண்பர்கள் உறவினர்கள் தேவையான நேரத்தில் கண்ணில் பட மாட்டார்கள். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. பழைய கடன் தொல்லை தரலாம்.
2)ரிஷபம் :-
உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் உறவினர்களும் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் அலுவலகத்தில் பல நன்மைகளை பெறுவர்,
3)மிதுனம்:-
நட்பு ரீதியான உதவியால் நல்ல முன்னேற்றங்களை சந்திப்பீர்கள். வட திசையிலிருந்து வரும் நல்ல செய்தி மகிழ்ச்சியை கூட்டும்.
4)கடகம்:-
செய்யும் காரியங்களில் தடை ஏற்பட்டாலும் வழக்கமான திறமையால் சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் புதிய வியாபாரம் தொடங்க கூட்டாளிகளுடன் திட்டமிடுவீர்கள்.
5)சிம்மம்:-
பயணங்களால் திருப்பம் ஏற்படக்கூடும் வாரம் இது. தடைப்பட்ட காரியங்களில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி பீர்கள்.
6)கன்னி:-
குடும்பம் சீராக நடைபெற்று வரும். தம்பதிகளின் ஒற்றுமை அதிகரிக்கும் . சகோதர வழி உறவுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும்.
7)துலாம்:-
எதிர்பார்க்கும் செயல்கள் சிறு தடைக்கு பின்னர் வெற்றி அளிக்கும். திட்டமிட்டபடி பண வரவுகள் வந்து சேரும்.
8)விருச்சிகம்:-
செலவுகளை சரி கட்ட நண்பர்களை நாடுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் பணிகளில் உற்சாகமாக இருப்பார்கள்.
9)தனுசு:-
சிறு இடையூறுகளையும் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். நீண்ட கால நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.
10)மகரம்:-
எதிர்பார்க்கும் பணவரவு தாமதமாகலாம். ஆனால் நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை உங்களை அவசரப்படுத்தும்.
11)கும்பம்:-
முக்கிய நபர் மூலம் தடைபட்டிருந்த ஒரு காரியம் நிறைவேற கூடும். கூட்டு தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள்.
12)மீனம்:-
வரவேண்டிய பண வரவு கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கடன் காரர்களை சமாளிக்க சில நண்பர்களின் உதவியை நாட வேண்டியது இருக்கும்.


