Monday, September 8, 2025
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 06 ஆகஸ்ட் 2024

06 ஆகஸ்ட் 2024 செவ்வாய்கிழமை

1)மேஷம்:-
செயல்களில் தீவிரமாக ஈடுபட்டாலும் சில காரியங்களிலேயே வெற்றி அடைவீர்கள். சில செயல்களுக்கு அதிக முயற்சி தேவைப்படும்.

2)ரிஷபம் :-
தீவிர முயற்சியோடு செயல்பட்டு காரியங்களில் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். தளர்வடைந்த செயல்களில் நண்பர்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவீர்கள்.

3)மிதுனம்:-
நிதானமாக செயற்பட்டு காரியங்களில் வெற்றிகரமான பலன்களை அடைவீர்கள். சில செயல்களில் அதிக முயற்சி தேவைப்படலாம்.

4)கடகம்:-
அதிக முயற்சியோடு செயற்பட்டு சில காரியங்களில் சிறப்பான பலன்களை அடைவீர்கள். பொறுப்புடன் பொறுமையுடனும் செய்யப்பட்டு முக்கியமான காரியத்தில் வெற்றி அடைவீர்கள்.

5)சிம்மம்:-
தீவிர முயற்சியோடு சிந்தித்து செயலாற்றினாலும் சில காரியங்களில் மட்டுமே வெற்றிகளை அடைவீர்கள்.

6)கன்னி:-
காரியங்களை அதிக முயற்சியுடன் செய்து வெற்றி பெறுவீர்கள். நெருங்கிய உறவினர்களால் சில தொல்லைகளை சந்திக்க நேரிடும்.

7)துலாம்:-
செய்யும் பணிகளை சிறப்பாக செய்து வெற்றியை நோக்கி முன்னேறுவீர்கள். சில காரியங்கள் திருப்தி அளித்தாலும் சில காரியங்களில் வெற்றி பெற தகுந்த நண்பர்களை நாட வேண்டியது இருக்கும்.

8)விருச்சிகம்:-
பயணங்களை தவிர்ப்பது நன்மை தரும். நண்பர்களும் உறவினர்களும் தக்க சமயத்தில் ஆதரவு தருவார்கள்.

9)தனுசு:-
கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை. தேவையற்ற சச்சரவு ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடுவதை தவிர்க்க.

10)மகரம்:-
புதிய இடம் வாங்குவது மற்றும் வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. செய்யும் செயல்களில் தீவிர முயற்சியோடு ஈடுபட்டு முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள்.

11)கும்பம்:-
தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. ஜாமின் கையெழுத்து இடுவது மற்றும் முக்கிய விஷயங்களை விவாதிப்பதும் நல்லதல்ல.

12)மீனம்:-
உங்கள் காரியங்களில் முயற்சியோடு செயல்பட்டு சிறந்த பலன்களை பெறுவீர்கள். அதிக அலைச்சல் இல்லாமல் காரியங்களை முடிக்க நண்பர்களின் உதவி தேவைப்படும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்