12ஆகஸ்ட் 2024 திங்கட்கிழமை
1)மேஷம்:-
பல செயல்களில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்காமல் போகலாம். சில செயல்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.
2)ரிஷபம் :-
எடுத்த காரியங்களில் முயற்சியுடன் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். என்றாலும் சில செயல்களில் சிறு சிறு தடைகளை சந்திப்பீர்கள்.
3)மிதுனம்:-
சில காரியங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டாலும் பலன் தந்த பல காரியங்களை எண்ணி மகிழ்ச்சியடைவீர்கள்.
4)கடகம்:-
நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் முன்னேற்றமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகளில் திருப்தியான சூழ்நிலை காணப்படும்.
5)சிம்மம்:-
உங்கள் செயல்கள் பலவற்றில் நன்மையான பலன்களை அடைவீர்கள். கடினமான செயல்களையும் முயற்சியோடு செய்து முன்னேற்றம் அடைவீர்கள்.
6)கன்னி:-
நீங்கள் எடுத்த முயற்சிகளில் நல்ல பல முன்னேற்றங்களை காண்பீர்கள். வரவேண்டிய தன வரவு தாமதம் இன்றி வந்து சேரும்.
7)துலாம்:-
உங்கள் முயற்சிகள் பலவற்றில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்பட்டாலும் சிலவற்றிலேயே வெற்றி காண்பீர்கள்.
8)விருச்சிகம்:-
முயற்சிகள் சிலவற்றில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். சில செயல்களில் தொடர்பு இருந்தாலும் தக்க நபர்களில் உதவியுடன் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
9)தனுசு:-
காரியங்கள் பலவற்றில் தீவிர முயற்சியுடன் ஈடுபட்டாலும் சிலவற்றிலே எதிர்பார்க்கும் பலனை அடைய முடியும்.
10)மகரம்:-
பல செயல்களில் முயன்று செயலாற்றினாலும் சிலவற்றில் மட்டுமே முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள்.
11)கும்பம்:-
ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதை தவிர்க்கவும். வரவேண்டிய தன வரவு சிறிது தாமதித்தே வந்து சேரும்.
12)மீனம்:-
செயல்கள் பலவற்றில் சிறப்பாக முயற்சிகள் செய்தாலும் சில வற்றிலையை எதிர்பார்க்கும் நன்மைகளை அடைய முடியும்.


