13ஆகஸ்ட் 2024 செவ்வாய்கிழமை
1)மேஷம்:-
உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்.
2)ரிஷபம் :-
எதிர்பார்த்த பணம் வரவு கைக்கு கிடைக்கும். இனிப்பான செய்தி கிடைத்து இல்லத்தில் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்.
3)மிதுனம்:-
மகிழ்ச்சி கொள்ளும்படி பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்கள் உறவினர்களும் தகுந்த நேரத்தில் உதவி செய்வார்கள்.
4)கடகம்:-
நண்பர்களின் உதவி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகளை அடைவீர்கள்.
5)சிம்மம்:-
வரவேண்டிய பணம் தாமதம் இன்றி வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் இனிதே நடப்பதால் மனதில் இன புரியாத மகிழ்ச்சி குடியேறும்.
6)கன்னி:-
சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பேச்சை குறைத்து செயல்களில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள்.
7)துலாம்:-
பணம் கைக்கு வருவதில் சிறுசிறு தாமதங்கள் ஏற்படலாம். பெண்களின் மரியாதைக்கு பங்கம் வராமல் நடந்து கொள்வதன் மூலம் நன்மைகளை அடைவீர்கள்.
8)விருச்சிகம்:-
பணப்பரிவர்த்தனையில் நிதானப் போக்கும் அவசியம். வரவேண்டிய பணம் தாமதமாக வந்து சேரலாம்.
9)தனுசு:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனத்துடன் இல்லாவிட்டால் உயர் அதிகாரிகளின் கோப பார்வைக்கு இலக்காக நேரிடும்.
10)மகரம்:-
வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்பார்த்தவைகள் சற்று தள்ளி போகலாம். வட திசையில் இருந்து வரும் தகவல் மனதுக்கு நிம்மதியை தரலாம்.
11)கும்பம்:-
மனதில் சலனமும் செய்யும் காரியங்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். அவசியமான காரியங்களை கவனமுடன் செய்வது பிரச்சனைகளை தவிர்க்கும்.
12)மீனம்:-
எதிர்பார்க்கும் உறவினர்கள் நண்பர்கள் கேட்ட உதவி செய்ய முடியாமல் அவர்களின் அதிர்ச்சிக்கு ஆளாகலாம்.


