14ஆகஸ்ட் 2024 புதன்கிழமை
1)மேஷம்:-
சொந்தத் தொழிலில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் தடைபடலாம். கூட்டுத் தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும்.
2)ரிஷபம் :-
உத்தியோகத்தர்கள் திறமையுடன் முக்கிய பணி ஒன்றை செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
3)மிதுனம்:-
உத்தியோகத்தில் ஏற்படும் புதிய திருப்பம் மகழ்வளிக்கும். ஒரு சிலருக்கு புதிய உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்கும்.
4)கடகம்:-
சக பணியாளர்களிடம் சுமூகமாக நடந்து கொள்ளாவிட்டால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். சொந்தத் தொழில் லாபகரமாக நடைபெறும்.
5)சிம்மம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் புது திருப்பம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.
6)கன்னி:-
உத்தியோகத்தில் முன்னேற்றமான திருப்பம் காணப்படும். அலுவலகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
7)துலாம்:-
உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களிடமும் உயர் அதிகாரிகளிடமும் சுமூகமாக நடந்து கொள்ளுங்கள்.
8)விருச்சிகம்:-
முக்கிய செயல்களை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தர்களில் சிலருக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும்.
9)தனுசு:-
சொந்தத் தொழில் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. செய்யும் பணிகளில் தவறுகள் நேரலாம். கவனம் தேவை.
10)மகரம்:-
உத்தியோகத்தர்கள் வேலைகளில் மிகவும் கவனமாக பணியாற்ற வேண்டும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
11)கும்பம்:-
சொந்தத் தொழிலில் வேலை பழு அதிகரிக்கும். அதே நேரம் வருமானமும் தள்ளி போகலாம். கூட்டுத் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும்.
12)மீனம்:-
கடன் பிரச்சினைகளில் கவனமுடன் நடந்துகொள்ளுங்கள். உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் விருப்பப்படி ஒரு முக்கிய காரியத்தை முயற்சியுடன் செய்து முடிப்பீர்கள்.


