19 ஆகஸ்ட் 2024 திங்கட்கிழமை
1)மேஷம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும் .
2)ரிஷபம் :-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. தொழில் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் பக்க பலமாக இருப்பது அரிது.
3)மிதுனம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. முன்னோர்களின் சொத்துக்களை பாக பிரிவினை செய்ததில் திருப்தி இருக்காது. இழப்புகளை ஈடு செய்ய எடுத்த முயற்சிகளில் தடை ஏற்படும்.
4)கடகம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க.தன வரவு தாராளமாக வந்தாலும் விரயங்கள் இரு மடங்காக இருக்கும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலை தூக்கும்.
5)சிம்மம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க.வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் தோன்றி மறையும். வாரிசுகளின் முன்னேற்றத்தில் சில தடைகள் வந்து அலைமோதும்.
6)கன்னி:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை அலை மோதும்.
7)துலாம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. குடும்பச் சுமை கூடும். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலாது. பிள்ளைகளால் வந்த பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.
8)விருச்சிகம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உயர்கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
9)தனுசு:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. அரசியல் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு சோதனை காலமாகும். வீண்பழிகளும் வழக்குகளும் வீடு தேடி வரலாம்.
10)மகரம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். மாற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புக்கள் நடைபெறாமல் போகலாம்.
11)கும்பம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. மனக்குழப்பத்தை அதிகரிக்க செய்யும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கிய தொல்லை ஏற்படும்.
12)மீனம்:-
பூரணை விரதம் அம்பாள் வழிபாடு செய்க. விபரீத ராஜயோக அடிப்படையில் சில நல்ல காரியங்களும் எதிர்பாராத திருப்பங்களும் நடைபெறும்.


