Monday, April 6, 2026
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 24 ஆகஸ்ட் 2024

24 ஆகஸ்ட் 2024 சனிக்கிழமை

1)மேஷம்:-
பொருளாதார பற்றாகுறை ஏற்படும். வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமலும் திணறுவீர்கள்.

2)ரிஷபம் :-
ஆரோக்கிய தொல்லை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீரென வரும் மாற்றங்கள் மன வருத்தத்தை உருவாக்கும்.

3)மிதுனம்:-
உங்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் தடைப்படும். பிள்ளைகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

4)கடகம்:-
பொருளாதார பற்றா குறையை சரி செய்ய புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்,பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீர் திருப்பங்கள் வந்து சேரும்.

5)சிம்மம்:-
தொழில் போட்டி அதிகரிக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் தேவைப்படும் நேரம் இது. எந்த காரியத்திலும் உடனடியாக முடிவெடுக்காமல் மறுபரிசீலனை செய்வது நல்லது .

6)கன்னி:-
தொழிலில் சில இழப்புகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளை நம்பி ஏமாறும் சூழ்நிலை உருவாகும்.

7)துலாம்:-
பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புனித பயணங்கள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

8)விருச்சிகம்:-
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். தொழிலில் இடமாற்றம் வருவதற்கான அறிகுறி தென்படும்.

9)தனுசு:-
உத்தியோகத்தில் திடீர் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

10)மகரம்:-
குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.

11)கும்பம்:-
மனக்குழப்பத்தை அதிகரிக்கும். விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கிய தொல்லையோடு அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வீண்பழிகள் ஏற்படும்.

12)மீனம்:-
நினைத்த காரியங்கள் நிறைவேறும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். விலக்கிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்