Monday, April 6, 2026
Your AD Here

இன்றைய ராசி பலன்கள்- 28 ஆகஸ்ட் 2024

28 ஆகஸ்ட் 2024 புதன்கிழமை

1)மேஷம்:-
வழக்கு விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் வரலாம். உத்தியோகத்தர்களுக்கு எதிர்பார்த்த உதவி அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும்.

2)ரிஷபம் :-
மனை வாங்கும் யோகம் வாய்க்கும். நிதி நிறுவனங்களில் கடன் பெற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கும்.

3)மிதுனம்:-
உறவினர்கள் நண்பர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளினால் எதிர்பார்த்து இட மாற்றம் கிடைக்கும்.

4)கடகம்:-
கடன் பிரச்சினைகளை மாற்றி அமைக்க முற்படுவீர்கள். பொன் பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

5)சிம்மம்:-
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். அரசு சம்பந்தமான உதவிகள் கிடைக்கக்கூடும்.

6)கன்னி:-
வயிறு சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை கையாள வேண்டியது இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும்.

7)துலாம்:-
உத்தியோகத்தர்கள் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்தினாலும் உயர் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

8)விருச்சிகம்:-
சக பணியாளர்களிடம் தேவை இல்லாமல் பேசுவதால் பிரச்சினை வளரும். சொந்த தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

9)தனுசு:-
உத்தியோகத்தர்கள் நல்ல திருப்பத்தை காண்பார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு இட மாற்றம் கிடைக்கப்பெறும்.

10)மகரம்:-
ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். உத்தியோகத்தர்களுக்கு சக நண்பர்களோடு ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

11)கும்பம்:-
சொந்த தொழில் செய்பவர்கள் பணிகளில் கவனமாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகளை கொடுக்க இயலாமல் போகலாம்.

12)மீனம்:-
உத்தியோகத்தர்கள் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். சக பணியாளர்களைப் பற்றி வீண்புகார்கள் அளிப்பது பிரச்சினையை அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்