மாளிகாவத்தையில் இன்று (செப்டம்பர் 03) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு, பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட, அப்பகுதியில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் உறுதிப்படுத்தினர். காயமடைந்த நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.