யாழ்ப்பாணம், இந்து மயானத்தில் அமைந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள், யாழ். மாவட்ட மேலதிக நீதவான் கௌரவ எஸ். லெனின்குமாரின் மேற்பார்வையின் கீழ் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.
முன்னதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கின் பணிகளை மேற்பார்வை செய்து வந்த கௌரவ ஏ.ஏ. ஆனந்தராஜா இன்று மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை வரையில், இந்த இடத்தில் மொத்தமாக 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 213 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சில மனித எச்சங்கள் சிக்கலான நிலையில் ஒன்றாகக் கலந்து காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.